லீப் ஆண்டு என்றால் என்ன? 366 நாள்கள் இடம்பெற காரணம்?
வழக்கமாக ஒவ்வோர் ஆண்டிலும் 365 நாள்கள் உள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டில் மட்டும் வழக்கத்திற்கு மாறாக 366 நாள்கள் இருக்கின்றன.
இவ்வாண்டு (2024) லீப் ஆண்டாகும்.
லீப் ஆண்டில் 366 நாள்கள் இடம்பெற என்ன காரணம்?
பூமி சூரியனைச் சுற்றிவரும் காலத்தைத்தான் ஓர் ஆண்டு குறிக்கிறது.
அதற்கு 365.2422 நாள்கள் ஆகின்றன.
கணக்கிட்டுப் பார்க்கும்போது 365 நாள்களை விட அது சுமார் 6 மணி நேரம் அதிகம்.
4 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால் அது ஏறக்குறைய 24 மணி நேரம்.
அதனை ஈடுகட்டவே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் கூடுதலாகக் கணக்கிடப்படுகிறது.
அந்தக் கூடுதல் நாள் பிப்ரவரி மாதத்தில் சேர்க்கப்படுகிறது.
ஆகையால் லீப் ஆண்டில் உள்ள பிப்ரவரி மாதத்தில் 29 நாள்கள் உள்ளன.
பிப்ரவரி 29ஆம் திகதி பிறந்தநாளாக இருந்தால்…
பொதுவாக 29 பிப்ரவரி அன்று பிறந்தவர்கள் பிறந்தநாளைப் பிப்ரவரி 28ஆம் தேதி அல்லது மார்ச் முதல் தேதி கொண்டாடுவது வழக்கம்.
இனி அடுத்துவரும் லீப் ஆண்டுகள்?
2028, 2032, 2036, 2040, 2044, 2048…