அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

100 சதவீதம் சார்ஜ் ஆன பின்னர் கையடக்க தொலைபேசியை சார்ஜிங்கில் வைத்தால் என்ன ஆகும்?

போன் முழுவதுமாக சார்ஜ் ஆன பிறகும் சார்ஜிங்கில் இருந்தால் என்ன ஆகும்? இந்த கேள்விக்கான பதில் இந்த கட்டுரை….

போனில் சார்ஜ் போகாமல் இருக்க ஸ்மார்ட்போன் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். அதோடு, சார்ஜரில் போட்ட போனை நீண்ட நேரம் அப்படியே விட்டுவிடுவதும் சகஜமாகிவிட்டது. 100% சார்ஜ் ஆன பிறகும் அதை சார்ஜருடன் இணைப்பது உங்கள் போனின் பேட்டரியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஓவர்சார்ஜிங், ஃபோன் பேட்டரியில் உடனடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது, ஆனால் அவ்வாறு செய்வது தொலைபேசியின் பேட்டரி ஆயுளை பாதிக்கிறது

சார்ஜ் முழுமையாக ஆன பிறகும், ஃபோனை சார்ஜிங்கில் வைத்திருப்பதால், ஃபோன் சூடாகும்.

ஒவ்வொரு முறையும் உங்கள் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட்டு, அதை டிஸ்சார்ஜ் செய்யும்போது, ​​அது ஒரு பேட்டரி சுழற்சி என்படுகிறது. அதிகப்படியான பேட்டரி சுழற்சிகள் பேட்டரி திறனைக் குறைக்கலாம்.

ஸ்மார்ட்போன் பேட்டரியை 80% வரை சார்ஜ் செய்வது நல்லது. இது பேட்டரி ஆயுளை நன்றாக வைத்திருக்கிறது. மேலும், தொலைபேசியை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்ய விடாதீர்கள். பேட்டரி 20% ஆக இருக்கும்போது, ​​அதை சார்ஜிங்கில் வைக்கவும்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!