வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்
ஹிக்கடுவை கடற்பகுதியில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று நீரில் மூழ்கியதையடுத்து, காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
உயிர்காப்பு படையினரால் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், 29 வயதான குறித்த ரஷ்ய பிரஜை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹிக்கடுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
(Visited 15 times, 1 visits today)





