இலங்கை செய்தி

சலூனில் தலைமுடியை பராமரித்த பெண்ணுக்கு என்ன ஆனது?

வெலிக்கடை பிரதேசத்தில் அழகு நிலையமொன்றில் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை தெரிவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க வெலிக்கடை பொலிஸாருக்கு இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, வெலிக்கடை பொலிஸார் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வெலிக்கடை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முறைப்பாடு செய்த பெண் தனது முறைப்பாட்டை சமர்ப்பித்ததுடன், தான் முன்னர் வெலிக்கடை பிரதேசத்தில் அமைந்துள்ள அழகு நிலையமொன்றில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், மறுநாள் அங்கு சென்று தலையில் சிகிச்சை பெற்று தலைமுடி உதிர்தல் மற்றும் காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், முறைப்பாட்டாளரின் மருத்துவ அறிக்கையை கோரியுள்ளதாகவும், அது இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும், உரிய அறிக்கை கிடைத்த பின்னர், நீதிமன்றத்தில் சமர்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை