சர்வதேச புகழ்பெற்ற அஜான் பிரம்மவன்சோ தேரருக்கு இலங்கையில் நேர்ந்த அவலம்

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வணக்கத்திற்குரிய அஜான் பிரம்மவன்சோ தேரருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேர்ந்த சம்பவம் தொடர்பில் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
உலகம் போற்றும் பிரித்தானிய தேசிய துறவியான வணக்கத்திற்குரிய அஜான் பிரம்மவன்சோ தேரர் தாய்லாந்தின் பாங்கொக் செல்வதற்காக கடந்த 31 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவ்வாறு வந்த பின்னர் ஜனாதிபதி விஐபி வசதிகளை வழங்கியதன் காரணமாக விமான நிலைய விஐபி முனையத்தில் உள்ள சாவடிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால், அவர் உரிய நேரத்தில் உரிய விமானத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை. சுமார் 12 மணி நேரம் கழித்து, அவர் மலேசியாவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரம்மவன்சோ தேரர் 12 மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றிய செயற்பாட்டு அதிகாரி தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் போது வணக்கத்துக்குரிய அஜான் பிரம்மவன்சோ தேரர் இலங்கையில் தாம் எதிர்கொள்ள நேர்ந்த சம்பவம் குறித்த உண்மைகளை விளக்கினார்.