டொனால்ட் டிரம்பிற்கு நேர்ந்த கதி!!! அமெரிக்க வரலாற்றி முதல் முறையாக தகுதி நீக்கம்
அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்படும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் நம்பிக்கை பொய்த்துப் போனது.
அதாவது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட முடியாது என கொலராடோ மாகாணத்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தை மேற்கோள் காட்டி இந்தத் தீர்மானம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சுமார் 03 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க கேபிடல் கட்டிடத்தை சுற்றி வளைத்த கலவரத்தில் ட்ரம்ப் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே அவர் தகுதியான வேட்பாளர் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அமெரிக்க அரசியலமைப்பின் 14வது திருத்தத்தின் 3வது பிரிவு ஜனாதிபதி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.
இந்த முடிவு ஜனநாயக விரோதமானது என டிரம்ப் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டிரம்ப் தரப்பு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.