அமெரிக்காவில் புதிய கார்களை ஏற்றிச் சென்ற ரயிலுக்கு ஏற்பட்ட நிலை
அமெரிக்காவில் சரக்கு ரயில் பாரிய தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
அமெரிக்காவின் வடக்கு அரிசோனாவில் புதிய கார்களை ஏற்றிச் சென்ற ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
கடந்த புதன்கிழமை நள்ளிரவில் அரிசோனாவின் வில்லியம்ஸுக்கு கிழக்கே நடந்த இந்த சம்பவத்தில் 23 BNSF ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக CCEM ஏஜென்சி தெரிவித்துள்ளது.
தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த கார்கள் பலவிதமான புதிய கார்கள் மற்றும் வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஆனால், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கோகோனினோ மாவட்ட அவசர மேலாண்மை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, என்ன தவறு நடந்தது என்பது பற்றிய விசாரணையைத் தொடங்க அந்நாட்டு மத்திய ரயில்வே நிர்வாகம் (FRA) ஒரு விசாரணைக்கு குழு அமைத்துள்ளதாம்.
(Visited 13 times, 1 visits today)





