சிங்கப்பூரில் திருமண விருந்தில் உட்கொண்ட 30 பேருக்கு ஏற்பட்ட நிலை

சிங்கப்பூரில் திருமண விருந்தில் உட்கொண்ட 30 பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 3ஆம் திகதியன்று செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் அந்த திருமண மதிய உணவு நடந்துள்ளது.
இருப்பினும், விருந்தில் கலந்து கொண்டு இதில் பாதிக்கப்பட்ட எவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று அது கூறியது.
இதில் மணமகளும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் புரிந்து கொள்கிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்து சுகாதார அமைச்சுடன் தற்போது விசாரணை நடத்தி வருவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) தெரிவித்துள்ளது.
கரோலின் மேன்ஷன் பால்ரூமில் (Caroline’s Mansion Ballroom) இந்த திருமண மதிய உணவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹோட்டல் அதிகாரிகளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
(Visited 10 times, 1 visits today)