இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி கூறுவது என்ன?

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் மெதுவாகவே இருக்கும் என உலக வங்கி World Bank கணித்துள்ளது.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2026 ஆம் ஆண்டில் 3.5 சதவீதமாகவும், 2027 ஆம் ஆண்டில் 3.1 சதவீதமாகவும் இருக்கும்.

இது 2025 இல் மதிப்பிடப்பட்ட 4.6 சதவீதத்தை விடக் குறைவாகும் என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மைய பொருளாதார நெருக்கடியின் நீடித்த விளைவுகள் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை என்பவற்றால் இந்நிலைய ஏற்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி 2026 ஆம் ஆண்டில் 2.6 சதவீதமாகக் குறையும் என்றும், பின்னர் 2027 ஆம் ஆண்டில் 2.7 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!