100 நாட்கள் டயட் இருந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?
நவீன காலத்தில் உடல் எடைக் குறைப்புக்கு பல முறைகள் வந்துவிட்டன. பெரும்பான்மையான மக்கள் 2-3 நாட்களிலேயே டயட் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்பதையும் நம்புகின்றனர்.
ஆனால் இவை எல்லாம் ஆரோக்கியமற்ற முறைதான். பெரும்பாலும், உடல் எடையை குறைக்க சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான டயட் உணவினையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலானோர் டயட் என்ற பெயரில் உணவினை தவிர்த்து பானங்களை மாத்திரம் எடுத்துக்கொள்கிறார். இவ்வாறு செய்வதால் பயன்கிடைக்காது. மாறாக உங்களுடைய உடல் வைட்டமின்களை இழந்து சோர்வடையும். அப்படியென்றால் எது ஆரோக்கியமான முறை?, 100 நாட்களுக்கு டயட் இருந்தால் என்ன நடக்கும். இந்த பதிவில் முழுமையாக தெரிந்துகொள்வோம்.
டயட் என்பது அனைத்து ஊட்டச்சத்துக்கள் உள்ளடக்கிய குறைவான கலோரிகளைக் கொண்ட பொதுவான டயட் முறையாகும். இது மற்ற கீட்டோ டயட் அல்லது ஆயுர்வேத டயட் போல் அல்ல. நீங்கள் 90 நாட்களுக்கு மேல் அல்லது 12 வாரங்களுக்கு மேல் டயட் இருக்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் ஒரே மாதிரியான உணவை நீண்ட நாட்களுக்கு உட்கொள்ளும்போது உடலானது அதற்கு ஒத்துழைப்பதை நிறுத்திவிடுகிறது.
100 நாட்கள் டயட் இருந்தால் உங்கள் உடலின் நடக்கும் மாற்றங்கள் என்ன..?
நச்சுக்களை வெளியேற்றும்
நீங்கள் டயட் முறையை பின்பற்றுகிறீர்கள் எனில் ஊட்டச்சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். அப்படி 100 நாட்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்கிறீர்கள் எனில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் உங்களை நச்சுகளின்றி முழுமையாக சுத்தம் செய்யும்.
ஆரோக்கியமான சருமம் :
நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதைதான் நம் உடலும் சருமத்தில் வெளிப்படுத்தும். நீங்கள் சுத்தமான உணவை உட்கொள்கிறீர்கள் எனில் அதாவது அமினோ ஆசிட் நிறைந்த உணவுகள், விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்கிறீர்கள் எனில் அதன் நன்மைகளை நீங்கள் சருமத்திலேயே உணர முடியும். .
குறைபாடுகளை தடுக்கும் :
நாம் உடல் எடையை குறைக்கவே டயட் என்னும் சீரான உணவு முறையை பின்பற்றுகிறோம். ஆனால் உணமையில் டயட் என்பது நம் உட்புற ஆரோக்கியத்தைம் மேம்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதேசமயம் உடல் எடையையும் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது :
நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கிறீர்கள் எனில் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். அப்படி நீங்கள் 100 நாட்களுக்கு டயட் இருக்கிறீர்கள் எனில் இந்த இடைப்பட்ட நாட்களில் எந்த வகையான ஜங்க் ஃபுட்களை உட்கொள்ள மாட்டீட்கள் இதனால் உங்கள் உடலில் உள்ள இம்யூனிட்டி செல்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.
ஆரோக்கியமான எடைக் குறைப்பு :
உடல் எடையை குறைப்பதில் ஆரோக்கியமான முறை மற்றும் ஆரோக்கியமற்ற முறை என இரு வழிகள் உள்ளன. ஆரோக்கியமற்ற டயட் முறையில் உடல் எடையை குறைப்பது உடலுக்கு கேடு தரும். எனவே ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றி சீரான டயட் முறையை பின்பற்றி உடல் எடையை குறைப்பது ஆரோக்கியமான முறையாகும்.