கலிபோர்னியன் கடற்கரையில் இரு பெண்களை உயிரோடு விழுங்கிய திமிங்கலம் (வீடியோ)

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் லூயிஸ் ஒபிஸ்போ விரிகுடா கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த இரண்டு பெண்களை திமிங்கலம் ஒன்று அப்படியே விழுங்கிய காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் லூயிஸ் ஒபிஸ்போ விரிகுடா கடற்கரையில் திங்கட்கிழமை காலை ஜூலி மக்சோர்லி மற்றும் லிஸ் கோட்ரியல் ஆகியோர் கயாக்கிங் எனப்படும் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக திமிங்கலத்தின் உணவு உண்ணும் பகுதிக்குள் சென்று விட்ட பெண்களை திமிங்கலம் அப்படியே தனது பெரிய வாயால் அள்ளித் தூக்கியது.
இதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த கயாக்கிங் விளையாட்டில் ஈடுபட்டு இருந்த நபர்கள் பலமாக கூச்சலிட்டனர், மேலும் இந்த காட்சிகளை அவர்களது கேமராக்களில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.திமிங்கலத்தின் பெரிய வாய்க்குள் அகப்பட்டு அப்படியே தூக்கப்பட்ட இரண்டு பெண் தோழிகளும் அதிர்ஷ்டவசமாக திமிங்கலத்தின் வயிற்றுக்குள் செல்லாமல் தவறி அதன் வாயிற்கு அடிப்பகுதியில் உள்ள தண்ணீரில் மூழ்கினர்.
இது தொடர்பாக உயிர் பிழைத்த ஜூலி மக்சோர்லி, நாங்கள் திமிங்கலத்தின் உணவு உண்ணும் பகுதிக்குள் மிக நெருக்கமாக சென்று விட்டோம் என்பதை உணரவே இல்லை, வெள்ளி மீன்கள் நாங்கள் இருக்கும் இடத்தை வட்டமிடுவதை பார்த்து ரசித்து கொண்டு இருந்தோம்.அப்போது திடீரென திமிங்கலம் ஒன்று வாயை பிளந்தபடி எங்களை அப்படியே தண்ணீரில் இருந்து தூக்கியது, அப்படியே நாங்கள் தண்ணீர்க்குள் விழுந்தோம், முதலில் நான் கண்விழித்து பார்த்த போது திமிங்கலத்தின் அடியில் இருந்தோம், அதை எப்படியாவது எங்கள் வழியில் இருந்து தள்ள யோசித்தேன்.
பின் நான் இறந்து விடப் போகிறேன் என நினைத்தேன் ஏனென்றால் அந்த திமிங்கலம் நேராக எங்கள் மீது விழப் போகிறது என்று நினைத்தேன், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன், இது மிகவும் பைத்தியக்காரத்தனமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
Yoooo a whale swallowed up 2 people on a kayak 🛶😳 pic.twitter.com/Ohjz1E3osd
— Shannonnn sharpes Burner (PARODY Account) (@shannonsharpeee) June 3, 2023