இலங்கையின் சுழற்பந்து வீச்சு சாதனையை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி

ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 ஓவர்களையும் சுழற்பந்து வீச்சில் வீசிய முதல் அணியாக வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைத்துள்ளது.
டாக்காவின் ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் பங்களாதேஷுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வரலாற்றில் முதல் முறையாக இன்னிங்ஸ் (Innings) முழுவதும் ஆல்-ஸ்பின் (All-Spin) பந்து வீச்சை தேர்ந்தெடுத்து சாதனை படைத்துள்ளது.
ஆண்கள் ஒருநாள் போட்டியில் இதற்கு முன் அதிகபட்சமாக சுழல் (Spin) பந்து வீச்சில் 44 ஓவர்களை வீசிய சாதனை இலங்கை அணி மூன்று முறை வைத்திருந்தது.
1996ல் மேற்கிந்திய தீவுகள், 1998ல் நியூசிலாந்து மற்றும் 2004ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை சாதனை படைத்திருந்தது.
(Visited 2 times, 1 visits today)