செய்தி விளையாட்டு

சமநிலையில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேச டெஸ்ட் தொடர்

வெஸ்ட் இண்டீஸ்-வங்காளதேசம் அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது.

வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 164 ரன்னிலும், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 146 ரன்னிலும் சுருண்டன.18 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை ஆடிய வங்காளதேசம் 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து இருந்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய வங்காள தேசம் 268 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீ சுக்கு 287 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜாகர் அலி 91 ரன் எடுத்தார்.

287 ரன் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சை ஆடியது. வங்காளதேச வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் அந்த அணி 185 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேசம் 101 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த வெற்றி மூலம் முதல் டெஸ்டில் ஏற்பட்ட தோல்விக்கு வங்காளதேசம் பதிலடி கொடுத்தது. முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் 201 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக் கில் சம நிலையில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வங்காளதேசம் 3வது வெற்றியை டெஸ்டில் பதிவு செய்தது.

அடுத்து இரு அணிகள் இடையே 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடர் வருகிற 8ந்தேதி தொடங்குகிறது.

(Visited 44 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி