பிரிட்டன் அமைச்சரின் பகீர் எச்சரிக்கை
அமெரிக்க ராணுவத்தால் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) கைது செய்யப்பட்டிருப்பது, சர்வதேச சட்டங்களின் வீழ்ச்சியைக் காட்டுவதாக பிரட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் வெஸ் ஸ்டிரீட்டிங் (Wes Streeting) எச்சரித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், ‘சர்வதேச விதிகள் சிதைந்து வருவது பிரிட்டனின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதுரோ, தன் மீதான போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா, சீனா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மறுபுறம், வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருக்க, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்தப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையைப் பலப்படுத்த வேண்டிய நேரம் இது என்றும் வெஸ் ஸ்டிரீட்டிங் வலியுறுத்தியுள்ளார்.





