இந்தியா: பயிற்சியின்போது 270 கிலோ எடை கழுத்தில் விழுந்து பளுதூக்குதல் வீராங்கனை உயிரிழப்பு

ராஜஸ்தானின் பிகானர் மாவட்டத்தில் ஜூனியர் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற பவர் லிஃப்டிங் வீராங்கனை பயிற்சியின் போது 270 கிலோ எடையுள்ள ராட் கழுத்தில் விழுந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த உடனேயே, ஆச்சார்யா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். பயிற்சியாளர் யாஷ்டிகாவை ஜிம்மில் எடை தூக்கச் செய்தபோது இந்த விபத்து நடந்ததாக திவாரி கூறினார். விபத்தில் பயிற்சியாளருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக குடும்பத்தினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, புதன்கிழமை உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
17 வயது பளுதூக்குதல் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சாரியா, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.