ஐரோப்பா

பிரித்தானியாவில் வார இறுதியில் மூடபடவுள்ள நெடுஞ்சாலை : வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் M25 பாதை மூடப்படவுள்ளதால் வாகன ஓட்டிகள் மாற்று வழிகளை பின்பற்ற பரிந்துறைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மாற்று வழிகளை பின்பற்றும்போது கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

M25 பாதையானது வரும் வெள்ளிக்கிழமை (10.05)   இரவு 9 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை (Surrey) சர்ரே  சந்தியின் இரு திசைகளிலும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறுகிய மாற்று வழிகளைக் கண்டறியும் முயற்சியில் திசைதிருப்பல் அறிகுறிகளைப் புறக்கணிக்கும் எவரும் தினசரி £12.50 ULEZ கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை குறைந்த உமிழ்வு தரநிலைகளை சந்திக்கும் கார்களுக்கு இது பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!