பிரித்தானியாவில் அடுத்த 03 வாரங்களில் வானிலையில் ஏற்படும் மாற்றம்!
பிரித்தானியாவில் அடுத்த 03 வாரங்களில் 25 செமீ வரை பனிப்பொழிவு இருக்கும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஸ்காட்லாந்தின் பெரும்பாலான பகுதிகள், நார்தம்பர்லேண்டின் சில பகுதிகள், டைன் அண்ட் வேர், கவுண்டி டர்ஹாம் மற்றும் நார்த் யார்க்ஷயர் போன்ற பகுதிகளை பனிப்புயல் பாதிக்கும் என்பதை வரைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
இந்த பனிப்பொழிவு வரும் நாளை (30.12) முதல் வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதிவரையில் நடைமுறையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வானிலை அலுவலகத்தின் தலைமை முன்னறிவிப்பாளர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஞாயிற்றுக்கிழமை முதல் ஸ்காட்லாந்தின் வடமேற்குப் பகுதிகளைப் பாதிக்கும் கனமழையைக் காணத் தொடங்குவோம்.
சிறிது ஓய்வுக்குப் பிறகு, திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஸ்காட்லாந்து முழுவதும் மழை மற்றும் பலத்த காற்று வீசும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.