பிரித்தானியவில் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன் நிகழும் வானிலை மாற்றம்!
மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் இந்த ஆண்டு வெள்ளை கிறிஸ்துமஸை அனுபவிக்க முடியும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குளிர்கால முன் பகுதி வடமேற்கு ஸ்காட்லாந்திலிருந்து கும்பிரியா மற்றும் வடகிழக்கு வரை நீண்டிருக்கும்.
நியூகேஸில் மற்றும் எடின்பர்க் ஆகிய முக்கிய நகரங்கள் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் தெற்கு அல்லது மத்தியப் பகுதிகளில் உள்ள மக்கள் கிறிஸ்துமஸுக்கு முன்பு குளிரான வானிலையை அனுபவிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சில சமயங்களில் கார்டிஃப், சவுத்தாம்ப்டன் மற்றும் பர்மிங்காம் ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யும்.
(Visited 47 times, 1 visits today)





