பிரித்தானியாவில் வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு : விமானங்களுக்காக காத்திருக்கும் பயணிகள்!
பிரித்தானியாவில் தற்போது நிலவும் அசாதாரண காலநிலை வரும் நாட்டிகளில் படிப்படியாக குறைவடையும் என வானிலை அலுவலகம் அறிவித்துள்ளளது.
இங்கிலாந்தின் பெரும்பகுதியை, முக்கியமாக தென்கிழக்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் மூடுபனி அதிகளவில் பாதிப்பை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக கேட்விக், ஹீத்ரோ மற்றும் மான்செஸ்டர் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கிட்டத்தட்ட அனைத்து திட்டமிடப்பட்ட புறப்பாடுகளும் தாமதமாக அல்லது சிக்கலான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேரடி புறப்பாடு பலகையில் தற்போது கேட்விக் விமான நிலையங்களில் தாமதமாகி வரும் விமானங்களின் நீண்ட பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)