ஆயுத பரிசோதனைகள் தொடரக்கூடும் : வடகொரியா!
அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தனது நாட்டின் அதிநவீன ஏவுகணையின் மூன்றாவது சோதனையை வடகொரியா வெற்றிகரகமாக செய்து முடித்துள்ளது. இது மேற்குலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது.
இந்நிலையில் இது குறித்து வடகொரிய அதிபர் கிம்ஜொங் உன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் தனது வளர்ந்து வரும் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தில் நம்பிக்கையுடன் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ஆயுத சோதனை நடவடிக்கைகளைத் தொடரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் விமர்சகர்கள், அமெரிக்க நிலப்பரப்பை குறிவைத்து செயல்படும் ஏவுகணைகளை நிரூபிக்க வட கொரியா இன்னும் குறிப்பிடத்தக்க சோதனைகளை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
(Visited 6 times, 1 visits today)