ஐரோப்பா

உக்ரைன் போரால் ஆயுதங்களுக்கு பற்றாக்குறை – ஏவுகணைகளை தயாரிக்கும் ஆஸ்திரேலியா

உக்ரைன் போரில் உக்ரைனிற்கு மேற்குலகம் வழங்கும் வெடிபொருட்களின் அளவு குறித்து கரிசனை எழுந்துள்ளது.

இந்த நிலையில் வெளிநாடுகளின் பாதுகாப்பு திறனை அதிகரிப்பதற்காக ஆஸ்திரேலியா ஏவுகணைகளை தயாரித்து அமெரிக்காவிற்கு வழங்கவுள்ளது.

இருநாடுகளின் வெளிவிவகார பாதுகாப்பு அமைச்சர்கள் மத்;தியில் பிரிஸ்பேர்னில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கையில் அவுஸ்திரேலியா கைச்சாத்திடும். இந்த உடன்படிக்கை மூலம் ஆயுதஉற்பத்தியில் ஒரு முக்கிய நாடு இடத்திற்கு அவுஸ்திரேலியா தன்னை உயர்த்திக்கொள்ளும்.

மேலும் உள்நாட்டு ஆயுத உற்பத்திகளை ஆஸ்திரேலியானவினால் அதிகரிக்க முடியும். வெள்ளிக்கிழமை இருநாடுகளினதும் பாதுகாப்பு அமைச்சர்கள் சந்தித்தவேளை இந்த உடன்படிக்கை குறித்து இறுதிசெய்துள்ளனர்.

ஏவுகணை திட்டத்தில் அமெரிக்க அரசாங்கம் 4பில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!