இலங்கை செய்தி

அமைச்சு வழங்கினால் அதனை ஆய்வு செய்வோம் – சுமந்திரன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிக்கான அழைப்பிதழ் கிடைத்தால் அதுபற்றி ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

6 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் சிவப்பு ரிப்பன் அணிந்திருந்த படங்கள் தற்போதும் காணப்படுகின்ற போதிலும் அமைச்சுப் பதவிகளை இலக்காகக் கொண்டு அவ்வாறான படங்களை தன்னுடன் எடுக்கப் போவதில்லை எனவும் சுமந்திரன் இங்கு தெரிவித்துள்ளார்.

“கடந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளைப் பெறக் கூடாது என்ற கருத்து இருந்தது.

நிலையான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை மத்திய அரசு உறுப்புரிமையை பெறக்கூடாது என்ற கருத்தும் இருந்தது.

ஆனால் கட்சியின் கொள்கை அதுவல்ல, 1966ல் இருந்து எமது கட்சியின் பிரதிநிதிகள் அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த காலம் மாறிவருகிறது.

சூழ்நிலைகளும் மாறுகின்றன. அதன்படி, அப்படி வாய்ப்பு கிடைத்தால் அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு’’ என்றார்

(Visited 3 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை