ஆட்சியைக் கவிழ்ப்போம்: நாமல் சபதம்!
“துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்காக கப்பல் நிர்மாணிக்கப்படுவதில்லை. அது ஆழ்கடலில் பயணித்தாக வேண்டும். புயல் வரும், சவால்களும் வரும்.
கௌரவ ஜனாதிபதி அவர்களே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்பதை உங்கள் அரசாங்கத்துக்கு நினைவு படுத்துகின்றோம். அதற்காகவே மக்கள் சக்தி கட்டியெழுப்படுகின்றது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
எனவே, நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றி, அரசாங்கம் சேவை செய்ய ஆரம்பிக்க வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.
அத்துடன், நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்ற வேண்டம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நாமல் ராஜபக்ச நன்றிகளைத் தெரிவித்தார்.




