பிரித்தானியாவை அணு ஏவுகணைகள் மூலம் தாக்குவோம் – மிரட்டி பார்க்கும் ரஷ்யா!
அணு ஏவுகணைகள் மூலம் பிரித்தானியாவை அழிக்கப்போவதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பேராசிரியர் டூம்ஸ்டே என்று அழைக்கப்படும் புடினின் ஆலோசகர் செர்ஜி கரகனோவ் (Sergei Karaganov) ரஷ்ய தொலைக்காட்சியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
“குறைந்தபட்சம், இலக்குகளில் ஒன்று பிரித்தானியாவாக இருக்க வேண்டும். நாம் தயாராக இருக்க வேண்டும், தலை துண்டிக்கும் தாக்குதலை நடத்தும் திறன் எங்களிடம் உள்ளது என்பதை பிரித்தானியா புரிந்துக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்ய போர் குறித்த சமாதான பேச்சுவார்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதனை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் இந்த சொற்பொழிவு காணப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே சுமார் 04 மணிநேரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தை கிரேம்ளின் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நிராகரித்ததுடன் முடிவடைந்துள்ளது.
கியேவ் டான்பாஸ் (Donbas) பகுதியை கொடுத்துவிட்டு சரணடையாவிட்டால் போர் நிறுத்தம் சாத்தியப்படாது என ரஷ்யா கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.





