தேசிய பட்டியல் உறுப்பினர்களை நேர்மையாக நியமிப்போம்
ஐக்கிய மக்கள் சக்திக்குரிய தேசிய பட்டியல் உறுப்பினர்களை அரசியலமைப்புக்கு இணங்க முன்னுரிமைப் பட்டியலுக்கு இணங்க இன்னும் சில தினங்களில் நிவர்த்தி செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கூறுகிறார்.
ஊடகவியலாளர்களுக்கு இவ்விடயமாக பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஏனைய கட்சிகளுடனான புரிந்துணர்வுக்கு இணங்க செயற் படுதல் மற்றும் பாராளுமன்றத்தில் தற்போது இருக்க வேண்டிய அதிலும் எதிர்கால அரசியலுக்கு நலன்களை சேர்க்கக்கூடிய உறுப்பினர்கள் விடயத்தையும் கருத்தில் கொண்டு முன்னுரிமை வழங்கி மேற்படி உறுப்பினர்களை இன்னும் சில தினங்களில் அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





