அரசியல் இலங்கை செய்தி

கல்வி ஆபாசமாக்கப்டுவதையே நாம் எதிர்க்கின்றோம் – சஜித்

“கல்விச் சீர்திருத்த முன்னெடுப்புகளை நாம் எதிர்க்கவில்லை. மாறாக கல்வியை ஆபாசமாக்கும் நடவடிக்கையையே எதிர்க்கின்றோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல வேடிக்கையான சம்பவங்களைச் செய்து வருகின்றது.

கல்விச் சீர்திருத்தங்கள் முறையான கலந்துரையாடல்கள் இல்லாமல் முறைசாரா முறையில் முன்னெடுத்து வருகின்றது.

கல்வி மறுசீரமைப்பை நாம் வலியுறுத்தியபோது தேசிய மக்கள் சக்தி எம்மை விமர்சித்தது.

ஆங்கிலம், சீனம், ஜப்பான் மற்றும் இந்தி மொழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து நாம் பேசிய சமயங்களில், தற்போதைய ஆளும் தரப்பு அமைச்சர்கள் கிண்;டலடித்தனர்.

எதிர்க்கட்சி கல்வி சீர்திருத்தங்களுக்கு ஒருபோதும் எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை. கல்வியில் ஆபாசத்தை புகுத்துவதற்கே நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்.

இந்தப் பாடத்திட்டங்களைத் தயாரிப்பதற்கு பல கட்ட நடவடிக்கைகளைச் செய்யப்பட வேண்டியுள்ளன, ஆனால் இன்று அது எதுவும் முடிக்கப்படவில்லை.

ஆகையால் இதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகள், மீளாய்வுகள் முறையாக நிவர்த்தி செய்யப்பட்டிருந்தால், இந்த ஆபாச விடயங்கள் சேர்க்கப்பட்டிருக்காது.” – என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!