உலகம் செய்தி

ரஷ்ய அணு ஆயுதங்களுக்கு அஞ்சுகிறோம் – நேட்டோ இராணுவக் குழு தலைவர்

நேட்டோ, ரஷ்ய படைகளை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு துருப்புக்களை அனுப்ப விரும்புகிறது.

அது சாத்தியப்படுவதற்கு ஒரே ஒரு விஷயம் தடையாக இருக்கிறது.

நேட்டோவின் இராணுவக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து வெளியேறும் அட்மிரல் ராப் பாயர் ஞாயிற்றுக்கிழமை கூறியது இதுதான்.

“ரஷ்யாவிடம் அணுவாயுதங்கள் இல்லையென்றால், அவர்களை வெளியேற்ற உக்ரைனில் இருந்திருப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று செக் குடியரசில் நடந்த IISS Prague பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ராப் பாயர் கூறியுள்ளார்.

போர் வெடித்ததில் இருந்து உக்ரைனுக்கு நேட்டோ துருப்புக்களை அனுப்புவது பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டது, இருப்பினும் வெளிநாட்டு வீரர்கள் தன்னார்வலர்களாக போரில் இணைந்துள்ளனர்.

உக்ரேனை ஆதரிப்பதாகவும், ஆனால் நேட்டோ நேரடியாக மோதலில்  ஈடுபடாது என்றும் முன்பு அறிவித்தது.

உலகின் மிகப்பெரிய அணு ஆயுதக் களஞ்சியம் ரஷ்யாவிடம் உள்ளது.

பிப்ரவரி 2022 இல் விளாடிமிர் புடினின் படைகள் உக்ரைனை ஆக்கிரமித்தபோது,ரஷ்ய ஜனாதிபதி தனது அணுசக்தி படைகளை அதிக எச்சரிக்கையுடன் வைத்திருந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் அணுசக்தி மோதலின் அபாயம் ‘குறிப்பிடத்தக்கது’ என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், புட்டின் இந்த ஆண்டு மார்ச் மாதம், ரஷ்யா அணு ஆயுதப் போருக்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இதன் காரணமாக நேட்டோ படைகள் உக்கிரையினுக்குள் செல்லவில்லை, அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லையெனில் நாங்கள் அவர்களை உக்ரைனில் இருந்து வெளியேற்றியிருப்போம்,என்று நேட்டோவின் இராணுவக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து வெளியேறும் அட்மிரல் ராப் பாயர் கூறினார்.

(Visited 20 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி