ஆசியா

வர்த்தக போர் அல்லது வேறு எந்த போருக்கும் தயாராக இருக்கிறோம் – அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் சீனா!

டொனால்ட் டிரம்ப் கடுமையான வரிகளை அறிவித்த பிறகு, “வர்த்தகப் போருக்கு அல்லது வேறு எந்த வகையான போருக்கும்” தயாராக இருப்பதாக சீனா கூறுகிறது.

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனாவிற்கு கடும் வரிகளை விதித்து வர்த்தக போரை முடுக்கிவிட்டுள்ளார்.

இந்நடவடிக்கையானது உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் பெரும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் அமெரிக்காவிற்கு பதிலளிக்கும் வகையில் சீனாவும் பல வரிகளை விதித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு சீனா பதிலளித்தது, கோழி, பன்றி இறைச்சி, சோயா மற்றும் மாட்டிறைச்சி உள்ளிட்ட முக்கிய அமெரிக்க பண்ணை பொருட்களின் இறக்குமதியில் 15% வரை கூடுதல் வரிகளை அறிமுகப்படுத்துவதாகவும், முக்கிய அமெரிக்க நிறுவனங்களுடன் வணிகம் செய்வதில் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துவதாகவும் அறிவித்துள்ளது.

அத்துடன் அமெரிக்கா உண்மையிலேயே ஃபெண்டானில் பிரச்சினையைத் தீர்க்க விரும்பினால், ஒருவருக்கொருவர் சமமாக நடத்துவதன் மூலம் சீனாவுடன் கலந்தாலோசிப்பதே சரியான விஷயம்.

அமெரிக்கா விரும்புவது போராக இருந்தால், அது ஒரு கட்டணப் போராக இருந்தாலும் சரி, வர்த்தகப் போராக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த வகையான போராக இருந்தாலும் சரி, இறுதிவரை போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்.”

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!