போர் நிறுத்தத்துக்கு நாங்கள் தயார்: இஸ்ரேலியப் பிரதமரின் திடீர் அறிவிப்பு

காஸாவில் தற்காலிக போர் நிறுத்த உடன்பாட்டைச் செய்துகொள்வதற்குத் தயார் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு கூறியுள்ளார்.
ஹமாஸிடம் உள்ள பிணையாளிகளை விடுவிப்பதற்காக அதனைச் செய்யத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தது 20 பேர் இன்னமும் ஹமாஸின் பிடியில் இருக்கின்றனர். அவர்கள் உயிருடன் இருப்பதாய் நம்புவதாகத் திரு நெட்டன்யாஹு சொன்னார்.
காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல்களை அதிகரித்திருக்கிறது. அதை நிறுத்தும்படி அனைத்துலக நாடுகள் இஸ்ரேலுக்கு நெருக்குதல் அளிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் ராணுவத் தாக்குதல்களில் ஐம்பதுக்கும் அதிகமானோர் மாண்டதாய் காஸா அதிகாரிகள் கூறினர்.
காஸா மக்களைத் தெற்கு நோக்கி மாறிச் செல்லும்படி இஸ்ரேலியத் தற்காப்புப் படை வலியுறுத்தியுள்ளது.
காஸாவுக்குள் உதவிப் பொருள்களை அனுப்ப அண்மையில் இஸ்ரேல் ஒப்புதல் அளித்தது. 11 வாரங்களுக்குப் பிறகு உதவிப்பொருள்கள் கொண்ட 90 லாரிகள் காஸாவுக்குச் சென்றுள்ளன.