இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/heart-transplant-1296x700.webp)
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
1) மருத்துவப் பரிசோதனை
அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்வதால் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு ஆகியவற்றைச் சரிபார்க்கலாம்.
அதன் அடிப்படையில் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்பதை முன்கூட்டியே கணிக்கலாம் என்று கூறுகிறது New York Times இணையத்தளம்.
2) சிகரெட் பழக்கத்தைக் கைவிடுதல்
சிகரெட் புகைப்பதால் இதயத்தில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் உறையலாம். அது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.
மின்சிகரெட்டுகளும் இந்தப் பாதிப்பைக் உண்டாக்கலாம்.
விளம்பரம்
3) உடற்பயிற்சி
அடிக்கடி உடற்பயிற்சி செய்வது இதயத்தில் உள்ள தசைகள் வலுப்பெற உதவும்.
ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை, உடலில் உள்ள கொழுப்பு ஆகியவற்றின் அளவைக் குறைக்கும்.
வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான அளவு உடற்பயிற்சி செய்யலாம். உதாரணத்துக்கு மாடிப் படிகளில் ஏறி இறங்கலாம்.
4) காய்கறிகள், பழங்கள் சாப்பிடுதல்
முழு தானியங்கள், கொழுப்பு குறைந்த மாமிசம், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றைப் போதிய அளவு உண்பது இதய ஆரோக்கியத்திற்குச் சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
5) போதிய ஓய்வு
தினமும் 7 முதல் 9 மணிநேரம் உறங்குவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்கிறது New York Times இணையத்தளம்.
போதிய உறக்கம் இல்லாமல் போனால் மனவுளைச்சலும் உடல் எடையும் அதிகரிக்கும். 2ஆம் வகை நீரிழிவு உண்டாக வாய்ப்புள்ளது.
இரவில் நன்றாக உறங்க வேண்டுமெனில் காப்பியைக் குறைத்துக்கொள்வதும் அவசியம்.
6) மது அருந்தாதீர்கள்
மது அருந்துதல் அதிக உணவு உட்கொள்ளும் தன்மையை ஏற்படுத்தக்கூடும். அதனால் உடம்பில் உள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
அதன் விளைவாக இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். இதய நோயாளிகள் மது அருந்துவதை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆண்களைவிட பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்
மாதவிடாய் நின்றுபோதல், மார்பகப் புற்றுநோய் சிகிச்சை, கர்ப்ப காலத்தில் உருவாகும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றால் பெண்களுக்கு இதய நோய் உண்டாகும் வாய்ப்புகள் சற்று அதிகம் என்று சொல்லப்படுகிறது.
எனவே, இளம் வயதில் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.