இங்கிலாந்தில் அனைத்து வீடுகளுக்கும் மீண்டும் தடையின்றி நீர் விநியோகம்
இங்கிலாந்தின் கென்ட் மற்றும் மேற்கு சசெக்ஸில் வார இறுதியில் ஏற்பட்ட மற்றொரு மின் தடைக்குப் பிறகு, அனைத்து வீடுகளுக்கும் நீர் மீண்டும் விநியோகிக்கப்பட்டதாக தென்கிழக்கு நீர் வழங்கல் நிறுவனம் அறிவித்துள்ளது.
குழாய் பழுது பார்ப்பு பணிகளுக்கு பிறகு நீர் விநியோகம் இடம்பெற்றதாக அந்த நிறுவனத்தின் முகாமையாளர்
மேத்யூ டீன் தெரிவித்துள்ளார்.
மேலும் நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் தென்கிழக்கு நீர் வழங்கல் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த வாரம், கென்ட் மற்றும் மேற்கு சசெக்ஸில் சுமார் 30,000 வீடுகளில் ஆறு நாட்களுக்கு தண்ணீர் விநியோகம் தடைபட்டது.
அதனால் தென்கிழக்கு நீர் வழங்கல் நிறுவனம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது.




