6 நாள் போராட்டத்திற்குப் பின் சீரானது குடிநீர் விநியோகம்: நீர் நிறுவனம் மீது விசாரணை
பிரித்தானியாவின் கென்ட் மற்றும் சசெக்ஸ் பகுதிகளில் ‘கோரெட்டி’ (Goretti) புயல் காரணமாக ஆறு நாட்களாக நீடித்த குடிநீர் விநியோகத் தடை, தற்போது பெரும்பாலான வீடுகளில் சீராகியுள்ளதாக சவுத் ஈஸ்ட் நீர் (SEW) நிறுவனம் தெரிவித்துள்ளது.
புயலால் ஏற்பட்ட மின்சாரம் மற்றும் குழாய் உடைப்புகள் காரணமாக சுமார் 30,000 வாடிக்கையாளர்கள் கடந்த சனிக்கிழமை முதல் குடிநீரின்றித் தவித்தனர்.
குறிப்பாக டன்பிரிட்ஜ் வெல்ஸ் (Tunbridge Wells) பகுதியில் 6,500 வீடுகளுக்கு விநியோகம் சீராகியுள்ள போதிலும், சில இடங்களில் குறைந்த அழுத்தத்துடனேயே நீர் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது முறையாக இத்தகைய பாரிய தடை ஏற்பட்டுள்ளதால், அந்நிறுவனம் மீது ‘ஓஃப்வாட்’ (Ofwat) ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உரிம விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டால், நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 10 சதவீத அபராதம் விதிக்கப்படலாம் அல்லது நிர்வாகக் கட்டுப்பாடுகள் மாற்றப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.





