பாரிஸில் (Paris) உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre museum) நீர் கசிவு!
பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre museum) நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான படைப்புகள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
300-400 படைப்புகள், பெரும்பாலும் புத்தகங்கள், கசிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அருங்காட்சியகத்தின் துணை நிர்வாகி பிரான்சிஸ் ஸ்டீன்பாக் ( Francis Steinbock) தெரிவித்துள்ளார்.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த பெரும்பாலான புத்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கசிவு நீண்டகாலமாக இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பழுதுபார்ப்பு நடவடிக்கைகளை அடுத்த ஆண்டு முதல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கசிவு அருங்காட்சியகம் எதிர்கொள்ளும் மூன்றாவது பெரிய பிரச்சினையாக கருதப்படுவதாகவும், பிரான்சிஸ் ஸ்டீன்பாக் ( Francis Steinbock) மேலும் குறிப்பிட்டுள்ளார்.




