பிரித்தானியாவில் நீர் கட்டணங்கள் அதிகரிப்பு : 40 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு!
பிரித்தானியாவில் “ஆறுகளை சுத்தப்படுத்தவும், நீண்ட கால குடிநீர் விநியோகத்தைப் பாதுகாக்கவும்” உதவும் திட்டத்திற்கு Ofwat ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் நீர் வழங்குநர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பில்களை 36%க்கும் மேல் உயர்த்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாசுபாடு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் “இரட்டை நெருக்கடியை” நிவர்த்தி செய்ய நீர் வழங்குநர்கள் கட்டணங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலையில் Ofwat முதலில் முன்மொழிந்த 21% உயர்வை விட இந்த அதிகரிப்பு அதிகமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அதாவது ஐந்து ஆண்டுகளில் சராசரி உயர்வு சுமார் 40% ஆக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தற்போது, தெற்கு வாட்டர் வாடிக்கையாளர்களின் சராசரி பில் £420 பவுண்ட்ஸாக காணப்படுகிறது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் £642 ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.