கிளப் வசந்தாவின் மனைவிக்கு மலர்வளையம் அனுப்பப்பட்டதா?
கிளப் வசந்தாவின் மனைவிக்கு மலர்வளையம் அனுப்பியதாக வெளியான தகவல் பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுபோவில வைத்தியசாலையின் பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“அப்படி வரவில்லை. அப்படி ஒரு சம்பவம் நடந்தால், விசாரணையை தொடங்க காவல்துறைக்கு தெரிவிப்பேன். அப்படி ஏதும் இல்லை. மேலும் அவர் இருக்கும் இடத்தில் பாதுகாப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் மட்டும் வர முடியும் என’’ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 8ஆம் திகதி அத்துருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் க்ளப் வசந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். மேலும் நால்வர் படுகாயமடைந்திருந்தனர்.
இந்நிலையில், கிளப் வசந்தாவின் மனைவிக்கு மலர்வளையம் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக இன்று செய்திகள் வெளியாகியிருந்தன.
எவ்வாறாயினும், கிளப் வசந்தாவின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த மலர்சாலைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.