பிரித்தானியாவில் இளம் வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை!
பிரித்தானியாவில் ஐந்தில் ஒரு ஓட்டுனர் வாகனங்களை இயக்கும் போது சட்டவிரோதமாக தொலைபேசிகளை பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
IAM RoadSmart நடத்திய புதிய கணக்கெடுப்பில், 43 சதவீதமான இளம் ஓட்டுனர்கள் இந்த நடத்தையை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆறு இளம் ஓட்டுநர்களில் ஒருவர் தங்கள் பயணங்களில் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களுக்காக கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத தொலைபேசி பயன்பாட்டிற்கான அபராதங்கள், மார்ச் 2017 இல் இரட்டிப்பாகி, £200 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நடவடிக்கையை இளைஞர்கள் கைவிடுவதாக தெரியவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
2024 ஆம் ஆண்டில் மொபைல் போன் பயன்பாடு காரணமாக 154 பேர் வாகன விபத்துகளில் கொல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




