இலங்கை

இலங்கையில் க்ரீம்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் விற்பனை செய்யப்பட்டு வரும் க்ரீம்களில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பாதரசத்தின் அளவு அதிகமாக கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

புறக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்குக் கிடைத்த க்ரீம் வகைகள் தொடர்பாக இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

பெண்களின் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி பாதரசம் கலந்திருப்பதாக ஆய்வக அறிக்கைகள் உறுதி செய்துள்ளன.

இவ்வாறான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படக் கூடும் என்பதால்  தரமற்ற பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகாரசபை மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் கொழும்பு மாவட்ட சுற்றிவளைப்புப் பிரிவினர் அண்மையில் புறக்கோட்டை பகுதியில் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!