ஸ்பெயின் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை : நூதனமாக ஏமாற்றப்படும் மக்கள்!
ஸ்பெயின் செல்லும் பிரித்தானிய சுற்றுலா பயணிகள் நூதனமான முறையில் ஏமாற்றப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளதுடன், இது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்பானிய தீவான டெனெரிஃப் தீவுகளுக்கு பிரித்தானிய சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். 2022 இல் மட்டும் 2.2 மில்லியனுக்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக கூறப்படுகிறது.
அங்குள்ள கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் விரும்பி செல்வதுடன், அங்கு பல்வேறு ஆபத்துக்கள் சூழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாக அப்பகுதிகளில் பிக்பொக்கெட் தொழில் ஈடுபடுவர்கள் மக்களை அச்சுறுத்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழிகாட்டியை போல் ஏமாற்றி பொருட்களை கொள்ளையிட்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே அவ்வாறான இடங்களுக்கு செல்லும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.