பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்தும் எம்.பிகளுக்கு எச்சரிக்கை!
பாராளுமன்றத்திற்கு புறம்பான வார்த்தைகளை பயன்படுத்திய சில எம்.பிகளுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின்போது சில எம்.பிகள் அவைக்கு புறம்பான மொழியை பிரயோகித்தமை தொடர்பில் மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறி நிலையியற் கட்டளை 82.1 இன் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு கூறினார்.
எம்.பி.க்கள் பயன்படுத்திய அத்தகைய வார்த்தைகள் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், நேற்றைய அமர்வின் போது நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்துவது குறித்து விசாரிக்குமாறு நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்திற்கு அறிவுறுத்தியதாகவும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.





