Instagram பயனர்களுக்கு எச்சரிக்கை!
உலகெங்கிலும் உள்ள Instagram பயனர்கள் கடவுச்சொற்களை புதுப்பிக்கக்கோரி (password reset) மின்னஞ்சல்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பயனர்கள் இந்த சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களுக்குள் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாரப்பூர்வ கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்கள் @mail.instagram.com இல் முடிவடையும் டொமைன்களிலிருந்து மட்டுமே அனுப்பப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சல்களால் 17.5 மில்லியன் Instagram கணக்குகளின் விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்படப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை மின்னஞ்சல் கணக்குகளுக்கு தனித்துவமான, வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.





