சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள் தங்கள் அரசியல் காரணங்களுக்காக இந்த பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நீடிக்கும் இவ்வேளையில் வெளிநாட்டினருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தற்போது நடைபெற்று வரும் அந்த மோதலில் பல அப்பாவி மக்கள் இறந்துள்ளதாகவும், அது உலகளவில் உணர்ச்சிகளைத் தூண்டியுள்ளதாகவும் இன்று மனிதவள அமைச்சக பேஸ்புக் பதிவில் கூறியது.
அதிக பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, இது போன்ற வெளிநாட்டு நிகழ்வுகள் சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கம் மற்றும் அமைதியைப் பாதிக்க விடாமல் காப்பது முக்கியம் என அது குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் பணிபுரிபவர்கள் அல்லது வசிப்பவர்கள் வெளிநாட்டு அரசியலை இங்கு ஆதரிக்கவோ அல்லது கொண்டு வரவோ வேண்டாம் என உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை எச்சரித்துள்ளன.
பதாகைகள் மற்றும் கொடிகள் ஏந்துவது, மேலும் சுவரொட்டிகள் ஒட்டுவது போன்றவற்றிற்கும் அனுமதி இல்லை என எச்சரித்துள்ளனர்.
தீவிரவாதம், வன்முறை அல்லது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்டம் இருப்பதையும் அது நினைவு கூர்ந்தது.