தென் கொரியாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை!
தென்கொரியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் இன்று (29.02) பணிக்கு திரும்பவில்லை என்றால் அவர்களின் மருத்து உரிமம் இரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல், நாட்டின் ஜூனியர் டாக்டர்களில் 75% பேர் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிக மாணவர்கள் சேர்க்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் நம்புகிறது. வளர்ந்த நாடுகளில் தென் கொரியாவில் மருத்துவர்-நோயாளி விகிதம் குறைவாக உள்ளது. அதாவது, ஒரு மருத்துவரால் கவனிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் முதியோர் சனத்தொகையின் பின்னணியில், அடுத்த தசாப்தத்தில் தேவையான மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.