இங்கிலாந்தின் மிக ஆபத்தான பகுதிகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!
UK முழுவதும் பாதசாரிகளுக்கு ஆபத்தான இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் லண்டன் முதலிடத்தை பெற்றுள்ளது.
2013 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் போக்குவரத்துப் புள்ளியியல் துறையை ஹவ்டன் இன்சூரன்ஸ் நடத்திய ஆய்வில், பாதசாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்தது.
தரவரிசையின் படி லண்டன் நகரம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 28.15% பாதசாரிகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக 2018 இல் அதிகளவு விபத்துக்கள் நடந்த ஆண்டாக பதியப்பட்டுள்ளதுடன், 32.49% பாதசாரிகள் விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் பாதசாரிகளுக்கு மிகவும் ஆபத்தான பகுதியான டண்டீ சிட்டி மிகவும் பின்தங்கி உள்ளது. அதேபோல் வெஸ்மினிஸ்டர் பகுதியில் மிகவும் மோசமான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
தரவரிசையில் வடமேற்கு பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓல்ட்ஹாம் நான்காவது இடத்திற்கு முன்னேறியது.
2013 மற்றும் 2022 க்கு இடையில், ஓல்ட்ஹாமில் ஏறத்தாழ 22.63% விபத்துக்கள் பாதசாரிகளால் நிகழ்ந்தன. அதேபோல் அதிக ஆபத்தான பகுதியாக கிளாஸ்கோவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.