உலகளவில் சிறுவர்களிடையே வரலாறு காணாத உச்சத்தை எட்டிய உடற்பருமன் குறித்து எச்சரிக்கை

உலகளவில் சிறுவர்களிடையே உடற்பருமன் வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆரோக்கியமற்ற உணவால் 5 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட சிறாருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொதுவாக எடைக்குறைவு காரணமாக ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படும் என்ற போதிலும் இப்போது உடற் பருமனோடு ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது புதிய நிலைமையாகும்..
வளர்ச்சிக்கு இன்றியமையாத பழங்கள், காய்கள், புரதச்சத்து ஆகியவற்றைப் பிள்ளைகள் சாப்பிடுவதில்லை. மாறாக அளவுகடந்து பதப்படுத்தப்பட்ட உணவைச் சாப்பிடுகிறார்கள்.
விரைவு உணவை விளம்பரம் செய்பவர்களை ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் அவசர நிதியம் குற்றம் சுமத்தியுள்ளது. அவர்கள் நெறியற்றவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் நலனைப் பேணிக் காக்க, ஆரோக்கியமற்ற உணவு தொடர்பான விளம்பரங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும், அதிகச் சர்ககரை சேர்க்கப்படும் பானங்களுக்கும் ஆரோக்கியமற்ற உணவுக்கும் கூடுதல் வரி விதிக்கவேண்டும் மற்றும் பதப்படுத்தப்படாத புதிய உணவைத் தயாரிக்க ஊக்குவிக்கும் திட்டங்களை வகுக்கவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.