Ukவில் ஆபத்தான முறையில் காணப்படும் அணுசக்தி பதுங்குக்குழி!
பனிப்போர் கால அணுசக்தி பதுங்கு குழி ஒன்று கிழக்கு யார்க்ஷயரில் (Yorkshire) உள்ள டன்ஸ்டால் (Tunstall) கடற்கரைக்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளது.
கடுமையான கடல் அரிப்பு காரணமாக குறித்த பதுங்கு குழி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
1959 ஆம் ஆண்டு அணுசக்தி போர் கண்காணிப்பு சாவடியாக கட்டப்பட்ட இந்த பதுங்குக்குழி 1990 களில் கைவிடப்பட்டதாகவும், இப்போது பாறையின் விளிம்பில் ஆபத்தான முறையில் ஒட்டிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த பகுதியை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று யார்க்ஷயர் கவுன்சிலின் கிழக்கு ரைடிங் (East Riding of Yorkshire) கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.





