இலங்கை பேருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் தூரப் பயண சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள், கொள்ளையர்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவ்வாறான கொள்ளை குழுக்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தரப்பினர் சாதாரண பயணிகளை போன்று பேருந்துகளில் பயணிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் மற்றும் பயணிகள் அதிக கவனம் கொள்ள வேண்டும்.
குறிப்பாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் பேருந்துகளிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 20 times, 1 visits today)





