கனடாவில் வைத்தியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : மீறினால் அபராதம்!
கனடாவில் மருத்துவர்கள் 05 ஆண்டுகள் கியூபெக்கின் பொது சுகாதார வலையமைப்பில் பணியாற்ற கட்டாயப்படுத்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சட்டத்தை மீறும் வைத்தியர்களுக்கு நாள் ஒன்றுக்கு 02 இலட்சம் கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கனடாவில் மருத்துவர்களின் படிப்பிற்காக $435,000 முதல் $790,000 வரை செலவாகுவதாக சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே தெரிவித்துள்ளார்.
ஆகவே இவ்வாறாக மக்களின் பணத்தில் கல்வி கற்பவர்கள் அவர்களுக்கு சேவை செய்வதும் கட்டாயம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சட்டமூலமானது வைத்தியர்கள் 05 ஆண்டுகளுக்கு முன்னதாக பிற நாடுகளிலோ அல்லது மாநிலங்களிலோ சென்று பணியாற்றுவதை தடை செய்கிறது.
(Visited 1 times, 1 visits today)