வேல்ஸில் வாகன ஓட்டிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
வேல்ஸில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன சாரதிகளுக்கு அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நார்த் வேல்ஸ் காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது, குறிப்பாக பிளின்ட்ஷயர் கடற்கரை சாலையில். கனமழையால் கொன்னாஸ் குவே, ஓகன்ஹோல்ட் பேப்பர் மில், ஜான்ஸ்டவுன், சால்ட்னி, ரெக்ஸ்ஹாம் மற்றும் கிரெஸ்ஃபோர்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டள்ளது.
அத்துடன் இந்த பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு நிலையம் ( MET OFFICE) எச்சரிக்கை விடுத்துள்ளது.
(Visited 15 times, 1 visits today)





