கொழும்பு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு, மேல் மாகாணத்தில் கம்பஹா, வடமேல் மாகாணத்தில் குருநாகல் மற்றும் புத்தளம், வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம், பொலன்னறுவை, கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் தென் மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் அவதான நிலையில் காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த மாவட்டங்களில் வெப்பக் குறியீடு 39 முதல் 45 வரை காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக வெயிலில் படுவதும், நீண்ட நேரம் செயல்களில் ஈடுபடுவதும் சோர்வை உண்டாக்கும், மேலும் நீண்ட நேரம் செயல்களில் ஈடுபடுவதால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உமிழ்நீர் வெளியேறி தசைப்பிடிப்பு ஏற்படும்.
அதிகளவு தண்ணீர் அருந்துமாறும், வயோதிபர்கள் மற்றும் நோயுற்றவர்களைக் கவனித்துக் கொள்ளுமாறும், சிறு குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.