மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மகாவலி ஆறு நிரம்பி வழிவதால் பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதி கல்லெல்ல மற்றும் மானம்பிட்டிக்கு இடையில் மேலும் நீரில் மூழ்கியுள்ளது.
நேற்று மதியம் 2 மணி முதல் குறித்த வீதியில் இலகுரக வாகனங்கள் செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதோடு, தற்போது வாகனங்களின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகளும் இன்று (29) காலை 10 மணியளவில் திறக்கப்பட்டன.
மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் மாற்றுப் பாதையாக கிரிதலே, எலஹெர, பகமூனை, தெஹியத்தகண்டிய வீதியை பயன்படுத்த முடியும்.
(Visited 17 times, 1 visits today)





